எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் M.P.லோகநாதன், முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீஸ்வரன், லுணுகலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி ஆகியோர் தெரிவித்தனர்.
இன்றைய தினம் (11) பசறை நூலக கேட்போர் கூடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சையின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.