திலித் ஜயவீர வேட்புமனுவில் கையெழுத்திட்டார்

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான  திலித் ஜயவீரவுக்கான கட்டுப்பபணம் நேற்று (13) செலுத்தப்பட்டது.

திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *