பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்குவதாக சற்றுமுன் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடகூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில் இன்று மாலை(14) முதல் இடம்பெற்ற நீண்ட நேரம் நடைபெற்ற உயர்பீடக்கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த பின்னரே மேற்கண்டவாறு அறிவிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி உயர்பீட கூட்டத்தின் பின் , நாடாளாவிய ரீதியில் மாவட்ட செயற்குழுவை சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களின் முடிவுகளின் அடிப்படையிலும் பெருமான்மை தீர்மானத்தின் படியுமே மேற்கண்டவாறு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், சஜித் பிரேமதாஸாவிடம் சமூக சார் கோரிக்கைகளுக்கு எழுத்துமூலம் உடன்பாடு காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.