(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாழையூற்று பிரதேசத்தில் கடந்த 3 மாதகாலமாக வாடகைக்கு வீடெடுத்து அயலவரின் நம்பிக்கையை சம்பாதித்து அவர்களின் 13 பவுண் நகைகளை கைமாறாக எடுத்துச் சென்று பின்பு தலைமறைவாக யாழ்ப்பாணம் நாவற்குழியில் பிரிதொரு வீட்டில் தங்கியிருந்த இளம் தம்பதியினரை விசேட தேடுதலின் பின்பு திருகோணமலை தலைமை பொலிசார் கைது செய்ததுடன் நகைகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற பதில் நீதிவானிடம் ஆஜர்படுத்தியபோது தம்பதியினரை 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களது 7 வயது குழந்தையை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு பதில் நீதிவான் சுபாஷினி சித்ரவேல் உத்தரவிட்டார்.