முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்

(UDHAYAM, COLOMBO) – முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை  வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார்

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன்

சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்கள் பேசியிருக்கவேண்டும் ஆணால் பேசவில்லை ஆனால் இப்போது பேசியுள்ளார்கள்

கூடுதலாக அனைவரும் இணைந்தே இதுதொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என நினைக்கின்றேன்.

இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது போராடி இழந்த உயிர்களுக்கு நாம் செய்யும் செயற்பாடா இது இதனை அனைவரும் மனதில் இருத்தி செயற்படவேண்டும்.

நல்லதே சிந்திப்போம் நல்லதே நடக்கும் எனவும் குறிப்பிட்டார்.
​எஸ்.என்.நிபோஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *