(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களாதேஷ் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.
இன்றையதினம் ஜனாதிபதி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜித் அம்மையாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இதனைத் தொடர்ந்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகரை சந்திப்பார்.
இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்துப் பேசுவார் என ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்தார். பின்னர் பங்களாதேஷ் சுகாதார அமைச்சரையும் அவர் சந்திப்பார் என திரு.சமரவிக்ரம குறிப்பிட்டார்.
இந்த சந்திப்புக்களைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்காக விசேட இராப்போசனமும் கலாசார நிகழ்ச்சியும் ஏற்படாகி உள்ளது. இதனை பங்களாதேஷ் ஜனாதிபதி ஒழுங்கு செய்துள்ளார்.
ஜனாதிபதி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இலங்கைக்கு சமூக, பொருளாதார, கலாசார துறைகளில் கூடுதலான அனுகூலங்களைத் தரும் என ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டார்.