புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA)-ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

உத்தியோகப்பூர்வ தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் விளாடிமிர் புட்டின் 73 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

2012 ஆம் ஆண்டு 64 வீத வாக்குகளை பெற்ற புட்டின், இவ்வருடம் அதனை விடவும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதனிடையே ரஷ்யாவுக்கான பிரித்தானியாவின் முன்னாள் உளவாளி மீது நச்சுப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் காரணமாக பிரித்தானியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதனால் ரஷ்யாவை அடுத்த ஆறு வருடங்களுக்கு ஆள்வதற்கான மக்கள் ஆணையை பெற்றுள்ள விளாடிமிர் புட்டினுக்கு மேற்குலக தலைவர்கள் எவரும் வாழ்த்து தெரிவிக்காமை தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.

முன்னதாக விளாடிமிர் புட்டினுக்கு சீன ஜனாதிபதி ஜி Jinping , Iran, Kazakhstan, Belarus, Venezuela, Bolivia மற்றும் Cuba நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்த அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனி​டையே ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *