ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் – ஓய்வூதியத் திணைக்களம்.

(UTV | கொழும்பு) – 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு நெருக்கடி ஏற்படுமா என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். BE…

Read More

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கொள்கை – ரங்கே பண்டார.

(UTV | கொழும்பு) – நாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கோரிய மாற்றத்தின் ஆரம்பமாக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கட்சி சம்மேளனம் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற இருக்கிறது. கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த சம்மேளனத்தில் கட்சிக்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அத்துடன் நாடு செல்லும் போக்கை மாற்ற வேண்டும் என மக்கள் போராட்டத்தின் போது தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தது. நாட்டில் இருக்கும்…

Read More

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இவ்வாறானதொரு கடுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியில் அமர்வதால் அரசாங்கத்தில்  செல்வாக்கு…

Read More

கட்சி பிரச்சினை: நீதிமன்ற தீர்ப்பில் வென்றார் அதுரலிய -தோற்றார் ஞானசார

(UTV | கொழும்பு) –    ‘அபே ஜன பல பக்ஷய’வில் இருந்து அத்துரலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அத்துரலிய ரத்ன தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹார, ஜனக் டி சில்வா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாமினால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அபே ஜன பல பக்ஷயவின்…

Read More

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்.

(UTV | கொழும்பு) – நாகை- காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்கள். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கடந்த 10 ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி…

Read More

தேர்தல் கேட்க மாட்டேன் – அரசியல் போதும் : அமைச்சர் அலி சப்ரி

(UTV | கொழும்பு) – அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. எனது அரசியல் பயணம் ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அரசியல் எனக்கு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன்.அழைப்புகள் வந்தாலும் அதனை ஏற்கும் நிலையில் இல்லை. எனது தொழில்சார் நடவடிக்கையை முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளேன். அரசியலுக்கு வந்து ஒரு சதம்கூட சம்பாதித்தது கிடையாது. அதற்கான தேவைப்பாடும் எனக்கு…

Read More

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கத்துடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அந்த கட்சியின் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வது…

Read More

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று (10) உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நீதிமன்றத்தில்…

Read More

இராணுவ அதிகாரிகள்- சிப்பாய்களுக்கு பதவி உயர்வு.

(UTV | கொழும்பு) – 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 12 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 37 லெப்டினன் கேணல்கள்,…

Read More

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!

(UTV | கொழும்பு) – வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு ஏகோபித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…

Read More