ரதுபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகள் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதலில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பதிரண முன்னிலையில் அவர்கள் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – தங்க நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

கொரிய மொழிப்பரீட்சைக்கு மீண்டும் சந்தர்ப்பம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கு தோற்றமுடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சார்த்திகளுக்கு வேறு பரீட்சைக்கான திகதி ஒன்று வழங்குவதற்கு கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பப்பத்திரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் தென் மாகாணங்களில் 39 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன்,  பலாவெல, பாரவத்த மற்றும் கலவானை முதலான தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட 14 பாடசாலைகள் நாளை…

Read More

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை நினைவு கூறும் அனைவரும், மீண்டும் அதுபோன்ற துயரங்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது, அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

(UDHAYAM, COLOMBO) – வடகொரியா இன்று குறைந்த தூர போல்ஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது வெற்றிக்கரமான ஏவுகணை பரிசோதனை இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது இது ஜப்பானின் நிலப்பரப்பு திசையை நோக்கி ஏவப்பட்டதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவித்துள்ளன இந்தநிலையில் குறித்த ஏவுகணை பரிசோதனை, வடகொரியாவின் ஏவுகணை வலிமையை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளை தொடர்ந்தும் மீறி வடகொரியா இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Read More

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட டிவ் குணசேகர அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கோப் குழுவின் தற்போதைய தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி மற்றும் கோப் குழு உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா ஆகியோர் நாளையும், நாளை…

Read More

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

(UDHAYAM, COLOMBO) – மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் கிரிக்கட் குழாமில் 3 ஆண்டுக்கு பின்னர் கிரன் பவல் இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான 13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரர்களான விசோல் சிங் மற்றும் சிம்ரொன் ஹெட்மயர் ஆகியோருடன், கிரன் பவலும் இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் விளைவாக அவர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த…

Read More

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

(UDHAYAM, COLOMBO) – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, இரத்தினபுரி…

Read More

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா பிரதமர் அணிக்கும் மற்றும் சுற்றுலா இலங்கை அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது . எடம் வொஜஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்….

Read More