ஜனாதிபதி மஹாநாயக்க தேரர்கள் இன்று சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சங்க சபை பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அஸ்கிரிய மகாபீட செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார். மல்வத்துபீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மஹாநாயக்கர் மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், ராமானிக்க நிக்காயே மஹாநாயக்கர்…

Read More

சவுதி அரேபிய இளவரசருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இன்று  முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த …

Read More

சவூதி அரேபிய இளவரசர் – பிரதமருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டட தொகுதியில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை இலங்கை வந்த சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தாலால் பின் அப்துல் அஸீஸ் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே கொழும்பில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குற்றேரஸ் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் நற்பெயரை உலகம் முழுவதும் அறியச்செய்து திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கௌரவத்தினை ஜனாதிபதி பாராட்டினார். அவருக்கு தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததுடன், இலங்கையின் இளைய தலைமுறையினருக்காகவும் உலகவாழ் இளைய தலைமுறையினருக்காகவும் அவர்…

Read More

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன இதற்போது இலங்கையில் முஸ்லிங்கள் எதிர்நோக்கி வரும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது  ஐக்கிய அரபு  இராச்சியத்…

Read More

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று இரவு கலந்துரையாடவுள்ளனர். அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் புதிய அரசியல் அமைப்பு குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அரசியல்…

Read More

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை – ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  கிடையிலான சந்திப்பு நேற்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வண. பேராசிரியர் கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், வண. பேராசிரியர் கல்லேல்லே, சுமனசிறி தேரர், வண. கலாநிதி அக்குருடியே நந்த தேரர் உள்ளிட்ட தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பௌத்த புத்திஜீவிகள் சபை செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விரிவாகக்…

Read More

தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் நம் நாட்டின் தற்போதைய காலகட்டத்திலே நிலவுகின்ற நல்லிணக்கத்தையும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரியானீ குணரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைவர்…

Read More

பாகிஸ்தான் கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சந்தித்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்;வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

(UDHAYAM, COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கஸகஸ்தானில் இடம்பெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஸகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் நேற்று ஆரம்பமானது. இதில் கஸகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள்  உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் பார்வையாளராக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினராக இணைய முயற்சிகளை மேற்கொண்டன….

Read More