பாடசாலைகள் இன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன. பாடசாலை சுற்றாடலை பாதுகாப்பதை உறுதி செய்து, பாடசாலை தவணை ஆரம்பமாவதுடன் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளைn வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கhக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்கள்’வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பாடசாலைகளிலும் குப்பைகள் மற்றும் நுளம்புகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள்…

Read More

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலே இடம்பெறுவதாகவும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த கலந்துரையடல்களில் எட்கா உடன்படிக்கை தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள்…

Read More

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட டிவ் குணசேகர அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கோப் குழுவின் தற்போதைய தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி மற்றும் கோப் குழு உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா ஆகியோர் நாளையும், நாளை…

Read More

இன்று பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அஜீத், 14 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா??

(UDHAYAM, KOLLYWOOD) – 1993ம் ஆண்டு எடுத்த அஜீத் புகைப்படத்தை தற்போது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் நடிகர் சுரேஷ் மேனன். புதிய முகம், பாச மலர்கள் ஆகிய படங்களை இயக்கியவர் சுரேஷ் மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர். தற்போது அவர் 4ஜி மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் பல ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை நான் பலமுறை வெளியிட்டுள்ளேன். ஆனால் அஜீத்துக்கு இருக்கும் ரசிகர்களுக்கு…

Read More

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை போல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஏ.ம். அஹமட் லெப்பை இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் கிண்ணியாவில் டெங்குவின் தாக்கம் குறைவான போதிலும், கிண்ணியாவின் தளவைத்தியசாலையில் நேற்று முன்தினம் மட்டும் 84 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேர் இன்று ஒப்படைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் ஊடக பேச்சாளர் லுதினல் கமான்டர் சமிந்த வலாகுலுகே இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பத்தாம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களே விடுவிக்கப்படவுள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கையின் வடக்கு கடற் பரப்பு எல்லைக்கு இரண்டு இந்திய கடற்படை படகுகள் வருகைதரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி…

Read More

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவததை கண்டித்து நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதனால் 1800 விசைப்படகுகளும், 8 ஆயிரம் கண்ணாடியிழை படகுகளும் கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு…

Read More

மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கச் செய்யும் வகையிலான பிரேரணையின் வரைவு குறித்து இன்று கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்த விபரங்களை தொடர்ந்து மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கச் செய்யும் வகையிலான பிரேரணையின் வரைவு குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த பிரேரணையில், ஏற்கனவே 2015ம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் வரவேற்கப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கம் செயற்படுத்த வேண்டிய பல விடயங்கள் இன்னும் தொக்கு நிற்கின்றன. இந்த விடயங்களை அமுலாக்கும் போது, அவற்றின் விபரங்களை தொடர்ச்சியாக மனித உரிமைகள் பேரவைக்கு அறியப்படுத்தும் வகையில் இந்த…

Read More

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தின் நீர் மற்றும் குடிநீர் தேவை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளது. இதில் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு பிரச்சிளைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

Read More

எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் தலைமையில் இன்று

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டுக்கான எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் எடின்பரோ பிரபுவான இளவரசர் பிலிப்பின் யோசனைக்கு அமைய 1956ஆம் ஆண்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் எந்தவொரு நாட்டிலும் 14 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள்…

Read More