‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – ‘ஜனாதிபதி விருது விழா- 2017’ ல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நாவலர் நற்பணிமன்றத் தலைவர் ந.கருணை ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (22) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி விருது 2017ல் விருது பெற்றவர்களான பேராசிரியர் சி.பத்மநாதன் – ஸ்ரீலங்கா சிகாமணி விருது , பேராசிரியர் சோ. சந்திரசேகரன் – வித்தியா நிதி விருது…

Read More

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட டிவ் குணசேகர அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கோப் குழுவின் தற்போதைய தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி மற்றும் கோப் குழு உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா ஆகியோர் நாளையும், நாளை…

Read More

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளை சந்தித்த அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். தற்போது 60 சதவீதமான குடியேற்றங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னைய ஆணைக்குழுக்களது அறிக்கைகளின் அடிப்படையில், காணாமல் போனோரது அலுவலகம் உருவாக்கப்பட்டு செயற்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி…

Read More

சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். துருக்கியின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கான கருத்துக் கணிப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் அவர் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த கருத்துக் கணிப்பு சமநிலையற்ற வகையில் அமைந்ததாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி எர்டோகன் கண்டித்துள்ளார்.

Read More

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பாக வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தனது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோசலிச ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி றென் டை குவான் (Tran Dai  Quang)  , இவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயன் பூ ரோன்ங் (Nguyen Phu Trong) தெரிவித்துள்ளனர். வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்த கவலைக்குரிய சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும் அரசாங்கமும் இலங்கையுடன் ஒன்றிணைந்துள்ளதாக வியட்நாம் ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சியின்…

Read More

2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது. விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்கை யொப்பங்களை…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விபரங்கள், உரிய நடவடிக்கைகளுக்காக விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளன. ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு பதில் வழங்கும் போது பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார். குறித்த…

Read More

வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிவரும் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.டி.முனி விசேட உரை நிகழ்த்தினார். பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கினார். பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தில் 30 வருட கால சேவையை…

Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நீதித்துறைக்கான நியமனங்களை வழங்கும் போது தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. அனைத்து தரப்புடனும் கலந்துரையாடியப் பின்னரே அது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும். நீதித்துறையின் சுயாதீனத்துவத்துக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Read More