இலங்கை அணிக்கு புதிய வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்…

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சம்பிக்க ராமநாயக்க செயற்படுகிறார். இந்நிலையில் எலன் டொனால்ட் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பான இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தனது. இதன்போது, உரையாற்றிய இந்திய பிரதமர், எதிர்வரும மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, முகாமைத்துவம்,…

Read More

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது தெரிவுசெய்யப்பட்டனர். ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு…

Read More

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர…

Read More

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்ச ரவி கருணாநாயக்க தெரிவத்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இளையுதிர்கால கூட்டத்திற்காக வொஷிங்டன் சென்றுள்ள நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளன உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு, விவசாய பொருட் பதனிடல், சுகாதார, ஏற்றுமதிக்கான பொருளுற்பத்தி…

Read More

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது. எனினும் எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் திகதி பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அவரது விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள் உட்பட சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சீன உத்தியோகபூர்வ சின்ஹூவா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் சீன சுற்றுலாத்தரப்பினரை இலங்கைக்கு வரவழைப்பதில் இலங்கை சுற்றுலாத்துறையினர் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்….

Read More

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

(UDHAYAM, COLOMBO) – சீனாவில் அடுத்த மாதம் ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கையில் இருந்து 12 மெய்வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஐந்து பெண் வீராங்கனைகளும், 7 வீரர்களும் உள்ளடங்குகின்றனர். சீனாவின் ஜியாக்சிங்கில் 24ம் திகதியும், ஜின்ஹுவாவில் 27ம் திகதியும், தாய்பேயில் 30ம் திகதியும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன. ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸிப் போட்டிகளிலும் இலங்கை பங்குகொள்வதால், இந்த போட்டித்தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

Read More

இலங்கை கடற்படை உதவியுடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

(UDHAYAM, COLOMBO) – பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் சிறப்புற நடைபெற்றது. குறித்த பண்டிகையில் யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி ஜெஸ்டின் பெர்னாட் ஞானபிரகாசம் மற்றும் வாளைப்பாடு திருச்சபையின் அருட்தந்தை எஸ் . விமலசேகரன் ஆகியோரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சுமார் 15,000 ற்கு மேற்பட்ட கத்தோலிக்க பக்தர்கள் குறுநகர், நாவாந்துறை, பாசையூர், வலைப்பாடு, இரனைமதநகர், பள்ளிக்குடா, மாந்ததீவு, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பருத்தித்துறை, மற்றும் மன்னார்…

Read More

மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாக மாறியுள்ள இலங்கை!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 155 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வானது 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகாலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு உலக மகிழ்ச்சிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கையில் 2016…

Read More