லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…
(UDHAYAM, COLOMBO) – மேற்கு லண்டன் தீப்பரவலில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 27 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது. இதில் 17 பேர் வரையில் பலியானதுடன், 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட சடங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.