பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

(UTV|COLOMBO)-ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஏ.ஈ.மனோகரன் (73)  சென்னையில் நேற்று காலமானார். சுகயீனம் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதே சிகிச்சை பலனளிக்காது காலமானார். இவரது பூதவுடல் கலைத்துறையினர் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் நாளை (24) புதன்கிழமை நடைபெறவுள்ளது. ‘சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா’ என்ற பாடல் மூலம் ஈழத்தில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்று மக்கள் மனதில் குடிகொண்டவர் இவராவார். ஏ.ஈ.மனோகரன் 1965 இல் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட…

Read More

நடிகர் சசி கபூர் காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல ஹிந்தி நடிகர் சசி கபூர் தனது 79வது வயதில் மும்பையில் வைத்து நேற்று  காலமானார். 18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களிலும், புராணப் படங்களில் நடிக்க தொடங்கிய சசிகபூர் படிப்படியாக முன்னேறி ஹிந்திப் பட கதாநாயகனாகவும், இணை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் கோலோச்சும் கபூர் குடும்பத்தில் திரைப்பட மற்றும் நாடக நடிகர்…

Read More

இசையமைப்பாளர் சோமபால காலமானார்

(UDHAYAM, COLOMBO) – பிரபல சிங்கள மொழி இசையமைப்பாளர் சோமபால ரத்னாயக்க, காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்துள்ளார். காலமாகும்போது அவருக்கு வயது 69 ஆகும்.

Read More

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்

(UDHAYAM, COLOMBO) – திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளரும், ஆயுட்கால தலைவருமான அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா தனது 68ஆவது வயதில் காலமானார். 1984 ஆம் ஆண்டு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் நிறுவப்பட்டது முதல் அவர் குறித்த நிலையத்தின் ஆயுட்கால தலைவராக செயற்பட்டு வந்தார். கடந்த சில காலமாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமாகியதாக இஸ்லாமிய அங்கவீனர் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன….

Read More

நிரூபம் சென் காலமானார்.

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் நேற்று முன்தினம் புதுடில்லியில் காலமானார். இறக்கும் போது 70 வயது. நிரூபம் சென் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றினார்.; இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராகவும் பதவிவகித்தவர். 1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார். இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னர் பல்கேரியா…

Read More

ஜேம்ஸ் பொண்ட் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பொண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார். ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பொண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) நேற்று காலமானார். கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த…

Read More

உலகின் மிக வயதான நபர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார். 1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்.

Read More

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி இம்மா மொரனோ உயிரிழந்துள்ளார். இவர் இறக்கும் போது இவரது வயது 117 ஆகும். 1899 ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இத்தாலியில் பிறந்த இவர் எட்டு பிள்ளைகளில் மூத்தவராவார். இவர் மூன்று நூற்றாண்டுகளில் இரண்டு உலக மகா யுத்தங்களை கண்டதுடன், 90 இற்கும் மேற்பட்ட இத்தாலிய அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாக அனுபவித்துள்ளார்.

Read More