ரணிலை பூச்சியத்துக்கு இறக்கினோம் – சுஜீவ சேனசிங்க
ராஜபக்ஷ்வினருடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியையும் ஆதரவாளர்களையும் அழித்துவந்தார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை பூச்சியத்துக்கு இறக்கினோம். செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர், மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்த லலித், காமினி, ரணசிங்க பிரேமதாச யுகத்தை உருவாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்…