Chief Editor

முஸ்லிம் எம்பிக்களின் பெயரை வாசித்து, சிங்கள எம்பிகளை மறைத்த தயாஶ்ரீ!

கொண்டையை மறந்து தொண்டைகிழிய கத்தினார் தயாசிறி. -கௌரவ கவிந்த ஜெயவர்த்தன (69 மில்லியன்), Dr. Kavinda Jayawardana கௌரவ அஜித் மன்னப்பெரும (50 மில்லியன்), Ajith Mannapperumaகௌரவ திலீப் (48 மில்லியன்), Dilip Wedaarachchiகௌரவ கயந்த கருணாதிலக்க (51 மில்லியன்), Gayantha Karunatillekaகௌரவ ஹர்சடி சில்வா (50 மில்லியன்), Harsha de Silvaகௌரவ ஹெக்டர் அப்புகாமி (18 மில்லியன்), Hector Appuhamyகௌரவ அளவத்துவேல (61 மில்லியன்), J.C. Alawathuwalaகௌரவ சஞ்செய் பெரேரா (50 மில்லியன்), Sujith Sanjaya…

Read More

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!

பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை  ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள்  பெண்களாகவும்,பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு  விரும்புகின்றார்கள் என்றே   கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவரும்,  சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், பாலின சமத்துவம் தொடர்பில் உயர்நீதிமன்றம்…

Read More

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

இணைப்பு: குறித்த நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்ற 68 வயதான குறித்த நபர் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மக்காவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்றப்பட்ட நிலையில். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடதையடுத்து உயிரிழந்தார். இவரின் ஜனாஸா மக்காவில்…

Read More

பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு  கொழும்பு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சஞ்சய் மஹவத்த தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு,…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச

முறையான வரி நிர்வாகம், வரி வலையில் சிக்காத தரப்பினரை உள்ளீர்ப்பது, டிஜிட்டல் மயமாக்கல் என அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்யாமல், அரச வருமான இலக்குகளை அடைய அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. தற்போது சர்வதேச நாணய நிதியம் கூறியதாக கூறி, அரசாங்கம் சொத்து வரியை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாடு விழுந்துள்ள பாதாளத்தில் இருந்து வெளியேற வேண்டும். இருந்தபோதும் இந்த…

Read More

“நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” நாடு திரும்பிய இலங்கை அணி

ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.  அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க,  வீரர்கள் சரியாக விளையாடாததால் இந்த ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலக நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் வருத்தமாக உள்ளதென ஹசரங்க தெரிவித்துள்ளார். “வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத்…

Read More

26ஆம் திகதி சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18)…

Read More

“முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர்”

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், அத்துடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

Read More

தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!

இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார். இந்த சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும் அவை பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“டலஸ், தயாசிறி – சஜித்துடன்”

டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

Read More