ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

இணைப்பு:

குறித்த நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்ற 68 வயதான குறித்த நபர் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மக்காவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்றப்பட்ட நிலையில். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடதையடுத்து உயிரிழந்தார்.

இவரின் ஜனாஸா மக்காவில் உள்ள அப்துல் அஜீஸ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.