Chief Editor

ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகிய கன்னத்தோட்டை பஹ்மா

றுவென்வெல்லை கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா பஹ்மா என்ற மாணவி, ஒரு வருடத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார். கேகாலை மாவட்டத்தின் கன்னத்தோட்டை சுலைமானியாக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பயின்று வந்த பஹ்மா, அடுத்த வருடமே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடமிருந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக தனிப்பட்ட பரீச்சாத்தியாக ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சையில் தோற்றினார். அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி 2.0694 Z ஸ்கோர் புள்ளிகளுடன்…

Read More

மோடியின் வெற்றி: இலங்கை அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கையின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கையை வெளிப்படுத்தி ஜனாதிபதி ரணில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், அவர் தமது எக்ஸ் தளத்தில் தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்…

Read More

இன்றைய வானிலை மாற்றம்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று தொடக்கம் (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின்…

Read More

மஹிந்தானந்தா- குணதிலக்க MP இடையில் மோதல்: ஒருவர் படுகாயம்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவிற்கும் மஹிந்தானந்த அளுத்கமவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்…

Read More

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வருத்தமானிக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03.06.2024)  உத்தரவு பிறப்பித்துள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தொழில் அமைச்சு கடந்த மாதம் 21 ஆம் திகதி வர்த்த மணி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.  இந்த வருத்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி  21 பெருந்தோட்ட நிறுவனங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்….

Read More

சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அனர்த்தங்களினால் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 04 ஆகும். புத்தளம்…

Read More

இன்றும் அதிக மழை? வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது…

Read More

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படுமா?

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாளை (4) பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது…

Read More

பாடசாலை விடுமுறை தொடர்பான தீர்மானம்!

நாளை (03) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

Read More

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

கனடாவின் (Canada) ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். சுமார் 900 கனேடியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொள்வனவு இயலுமையைக் கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய ரொறன்ரோ நகரவாசிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய நகரங்களில் தொழில்…

Read More