ஐ.ம. கூட்டணியுடன் இணைந்ததால் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசாங்கத்தால் நிறுத்தம் – சஜித்

தேர்தல் காலங்களில் அரச நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமான குற்றமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கொண்டமையால் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

Read More

தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்

தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More

அபிவிருத்தி திட்ட அமைச்சராக அலிஸாஹிர் மெளலானா நியமனம்.

அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அண்மையில் ரணில் தரப்புடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது

Read More

அனுர – உலமா சபை சந்திப்பு!

இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய…

Read More

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல் கலாசாரத்தின் விளைவுகளால் நாடு சூழப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு நாட்டை தேசியத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒரே குழுக்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை உருவாக்கி மக்களிடம் வந்தாலும்…

Read More

தலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவிதாரன.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதன்படி, தலதா அத்துகோரலவின் இராஜிநாமாவுடன், மேற்படி சபை உறுப்பினர் பதவி, இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்படவுள்ளது. கருணாரத்ன பரணவிதான தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

Read More

தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்வேன் – டில்ஷான்.

நான் இரட்டை குடியுரிமை பெற்றவன். எனக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையேற்பட்டால் இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்யவும் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

மொட்டுவின் எம்.பி எதிர்க்கட்சியில் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். 2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கருணாதாச மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

Read More

தலதா அத்துகோரள எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை இன்று (21)  விடுத்த அவர், இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார். ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக் கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டுள்ளார். சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்று அது அமைந்து விடும் என்றும் அவர்…

Read More

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய…

Read More