ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இன்று (21) தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
இதன்படி, தலதா அத்துகோரலவின் இராஜிநாமாவுடன், மேற்படி சபை உறுப்பினர் பதவி, இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்படவுள்ளது.
கருணாரத்ன பரணவிதான தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.