இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் இணைந்துகொண்டார்.