Category: உள்நாடு
ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க பல சர்வதேச குழுக்கள் இலங்கைக்கு விஜயம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் கண்காணிப்புக்காக பல சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு 337 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேர்தல் மற்றும் அது தொடர்பான கடமைகள் குறித்து நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் (11) மாலை இடம்பெற்ற விசேட விழிப்புணர்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்…
பாட்டலி சம்பிக்க சஜித்திற்கு ஆதரவு
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளார். இதற்கான உடன்படிக்கை நாளை (14) தலவத்துகொடை கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல – பிரசன்ன ரணதுங்க
ஜனாதிபதித் தேர்தலில் எமக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தான் போட்டி நிலவும். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல, மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் மரியாதை வைத்துள்ளாரே தவிர ராஜபக்ஷ குடும்பத்தின் மீது மரியாதை வைக்கவில்லை என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இன்று (12) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு அரசியல் கட்சியும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத் தூதுவருக்கும் அநுரவுக்கு இடையில் சந்திப்பு.
இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட்க்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (12) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்குத் திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்…
ரிஷாட், ரணிலோடு இணைய வேண்டும் – முஷாரப் பகிரங்க அழைப்பு.
சமூகத்தினதும் நாட்டினதும் நன்மை கருதி மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நமது சமூகமும், நாடும் எதிர்பார்க்கும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறான…
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆசனங்கள் வெற்றிடம்.
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) மற்றும் 64 (5) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்…
தேர்தல் ஆணைக்குழு அலுவலகப் பகுதிக்கு விசேட பாதுகாப்பு.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளாக ஒகஸ்ட் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் மக்கள் வேலைக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தெரிவித்துளளார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி – மூவர் பலி – மூவர் படுகாயம்.
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நிட்டம்புவயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சாரதியின் தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காயமடைந்த மூவரில் ஒருவர்…
இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்த சுமந்திரன், சாணக்கியன்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) குறித்த சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.