டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார். டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும்…

Read More

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுபோல் அயல்ர்லாந்தும் பலஸ்தீன் தனி நாடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற…

Read More

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதோடு அதற்குப் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க, மே 31 ஆம் திகதி வரை இதற்கான பங்களிப்பை வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான…

Read More

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக…

Read More

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் இலங்கையில் ஒருவர் பயங்கரவாத விசாரiணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குஜராத் விமானநிலையத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் இவர்க கைதுசெய்யப்பட்டார் விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்திய அதிகாரிகளின் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொலிஸார் பல…

Read More

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள்…

Read More

ரைஸின் மரணத்திற்கு முன் நோட்டமிட்ட CIA

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மரணத்தின் பின்னணி தொடர்பில் சர்வதேசம் முழு கவனத்தடையும் செலுத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு CIA தலைவர் சமீப காலங்களில் அதிக விஜயங்களை மேற்கொண்டிருந்ததாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார். சர்வதேச அளவில் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவற்று கூறியுள்ளார். மேலும் ” மத்தியக்கிழக்கில் அணுஆயுத…

Read More

ஈரான் செல்லும் அலி சப்ரி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரஸீசின் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள் இன்று இரவு ஈரான் நாட்டிற்கு செல்லவுள்ளார்.

Read More

ஈரான் ஜனாதிபதிக்காக ஐ.நாவில் மெளன அஞ்சலி – இலங்கை, இந்தியாவில் துக்க தினம்

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது குழுவினருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த மாதம் சுழலும் கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் மொசாம்பிக் தூதர் பெட்ரோ கொமிசாரியோ அபோன்சோ இந்த மௌன அஞ்சலியை செலுத்துமாறு தனது குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அவரது குழுவினரும்…

Read More

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமருக்கு பிடியபாணை பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான இஸ்மாயில் ஹனியே, யேயா சின்வார், முகமது டெய்ஃப் ஆகியோர் காஸா மற்றும் இஸ்ரேலில் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கு பொறுப்பேற்க வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்குரைஞர்…

Read More