ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மரணத்தின் பின்னணி தொடர்பில் சர்வதேசம் முழு கவனத்தடையும் செலுத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு CIA தலைவர் சமீப காலங்களில் அதிக விஜயங்களை மேற்கொண்டிருந்ததாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவற்று கூறியுள்ளார்.
மேலும் ” மத்தியக்கிழக்கில் அணுஆயுத பலம் பொருந்திய நாடாக இஸ்ரேல் காணப்படுகிறது.
இவ்வறானதொரு பின்னணியில் ஈரான் அதனை மிஞ்சுமாக இருந்தால் மத்தியக்கிழக்கின் சமநிலையில் பாரிய பாதிப்பு ஏற்படும்.
இதன்படி ஒரு நாடு நேரடியான யுத்தத்தில் இன்னொரு நாட்டுடன் தாக்குதலை ஏற்படுத்த விரும்பாத பட்சத்தில் அதன் அடுத்த இலக்கு என்பது புலனாய்வுத்துறையை வைத்து தாக்குவதே. ” என கூறியுள்ளார்.