சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

(UTV|KAZAKHSTAN) – சுமார் 100 பேருடன் பயணித்த கஸகஸ்தான் நாட்டு விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கஸகஸ்தானில், அல்மட்டி விமான நிலையத்தில் 100 பயணிகளுடன் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதி விமானம் விபத்திற்குள்ளானது.

இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *