தென்னாபிரிக்க அணி அபார வெற்றி

(UTV|COLOMBO) – இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய(29) நான்காம் நாள் ஆட்டத்தின்போது 376 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது

முன்னதாக, தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 284 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இதனை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 272 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆட்ட நாயகனாக, குயிண்டன் டீ கொக் தெரிவு செய்யப்பட்டதோடு, 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், தென்னாபிரிக்க அணி, 1:0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *