(UTV|கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ள கொவிட் 19 ஆட்கொல்லி வைரஸின் அச்சம் காரணமாக வெளிநாட்டு பயணிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித உம்ராஹ் யாத்திரிகர்களுக்கு வீசா வழங்குவதை சவூதி அரேபியா இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மதீனா நகர் பள்ளிவாசலுக்குள் சுற்றுலா பயணிகள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 07 லட்சம் யாத்திரிகர்கள் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக தற்போது அங்கு தங்கியிருப்பதாகவும் சவூதி அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.