(UTV|கொவிட்-19) – தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததால், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (Sanna Marin) தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில், சன்னா மரினுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லையென்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.