(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,236 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 62,773 ஆக அதிகரித்துள்ளதுடன், பலியானோர் எண்ணிக்கை 555 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், தற்போதைய நிலவரப்படி, அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,315 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 150,729பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.