(UTV|கொவிட்-19) – பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,186 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 462 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5,590 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி உலகமுழுவதும் 3,566,469 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 248,302 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.