(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,982,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 லட்சத்து 85 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 6,535,598 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனாவால் இதுவரை 536,786 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.