போதைப் பொருள் அச்சுறுத்தலில் இருந்து சிறுவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்

(UTV|திஸ்ஸமஹாராம) – எங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தில் நேற்று(05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எதிர்க்கட்சியினரை கைது செய்து அவர்கள் தொடர்பில் பிழையான செயற்பாடுகள் பின்பற்றப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். எனினும் எங்கள் அரசாங்கத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு காரணத்திற்காகவும் அரச ஊழியர்களை கைது செய்வதற்கு இடமளிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர்,

“.. இன்று நாங்கள் தொழில் பிரச்சினை குறித்து பேசுகின்றோம். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்றால், இந்த பகுதிகளின் இலங்கை இளைஞர் யுவதிகள் பாரிய அளவிலானோர் தொழில் செய்யும் முறையை அவதானிக்கலாம். எங்கள் இளைஞர் யுவதிகள் கொரியாவில் நிறைந்திருக்கின்றார்கள். ஜப்பானுக்கு சென்றாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றாலும் இலங்கை இளைஞர் யுவதிகள் அந்த நாடுகளில் தொழில் செய்யும் விதத்தை பார்க்க கிடைக்கின்றது. எங்கள் நாட்டிலேயே தொழில் உருவாக்கம் செய்வதென்றால் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் அத்தியாவசியமாகும். அப்படி இன்றி முதலீட்டாளர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதில்லை.

அதிவேக நெடுஞ்சாலை, விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றை அதற்காகவே நாங்கள் அமைத்தோம். தற்போது தொழில்துறை நகரம் அமைக்கின்றோம். இதுவரையில் மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்றை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கு முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் இளம் தலைமுறையினர் மிகவும் புத்தசாலிகளாகும். அவர்கள் வேறு கோணத்தில் சமூகத்தை பார்க்கின்றார்கள். போதை வஸ்து முழு நாட்டிலும் பரவியுள்ளது. பாடசாலை மாணவர்களை இதற்காக ஈடுபடுத்துவது என்பது ஒரு சோகமான விடயமாகும்.

பெற்றோர் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களின் சகோதரர்கள், தங்களின் பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். போதை வஸ்துவை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு நாங்கள் கடுமையாக செயற்ட எதிர்பார்த்துள்ளோம். இதுவரையில் வலது கையில் பிடித்த போதை பொருளை இடது கையில் விற்பனை செய்தவர்கள் தொடர்பில் விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அது தொடர்பில் மேலதிக தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள என நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய அளவிலானோார் இதுவரையிலும் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களை எங்களால் நிராகரிக்க முடியாது. தேர்தலில் அனைத்து வாக்குகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களை ஒதுக்குவதற்கு பதிலாக இணைத்துக் கொள்ள வேண்டும்..” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *