(UTV | அமெரிக்கா) – மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் நிலைக்கு வரும்வரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கலாம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.
எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
உலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடக்க உள்ள இந்த தேர்தலில் பெரும்பாலான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர். பெரும்பாலும் 70% இற்கும் அதிகமான நபர்கள் தபால் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.