அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி

(UTV |  அசர்பைஜான்) – ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகோர்னோ – கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீப காலமாக மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய படைகள் அசர்பைஜான் இராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக் மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *