New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கை அரசாங்கத்திற்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Diamond கப்பலின் உரிடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 442 மில்லியன் ரூபாய் பணமானது அபராதமாக வாங்கப்பட்டது இல்லை எனவும், அது கப்பலில் எற்பட்ட தீயை கட்டுப்படுததவதற்கான செலவீனங்கள் என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

MT New Diamond என்ற எரிப்பொருள் தாங்கிய கப்பல் குவைட் நாட்டின் மினா அல் அஹமத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா துறைமுகத்தை நோக்கி பயணித்திருந்த வேளையில், கடந்த 3ஆம் திகதி இலங்கையில் கிழக்கு பகுதியிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பலில் தீ பரவியிருந்தது.

அந்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டொன் மசகு எண்ணெய் மற்றும் கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 1700 மெற்றிக் டொன் டீசல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், 22 பேர் கப்பலிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *