இராஜினாமாவுக்கு தயாராகும் போரிஸ்

(UTV | இங்கிலாந்து) – இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது சம்பளம் போதவில்லை என தெரிவித்து அடுத்த ஆண்டு பதவியை இராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமராக செயல்பட்டு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னர் அவரது சம்பளம் ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாயாக இருந்து இப்போது 1.3 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த சம்பளம் அவருக்கு போதுமானதாக இல்லை எனக் காரணம் காட்டி அடுத்தாண்டு தன் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *