(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலயத்தில் 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
இவர்களில் 4,905 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6,134 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரையில் 21பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.