(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகராட்சி மன்ற பகுதி, குளியாப்பிடிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட – மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு, மாவனெல்லை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.