(UTV | கொழும்பு) – பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அன்றைய தினம் சில வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் அது தொடர்பிலான தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.