COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று

(UTV | ஜெனீவா) –  உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்தது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமாா் 6.6 கோடி பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இன்று வரையில் 15 இலட்சத்தைக் கடந்தது.

சா்வதேச கொரோனா பலி எண்ணிக்கை 1,524,457 ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *