(UTV | கம்பஹா ) – கம்பஹா – மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த மேலும் 4 பேருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வத்தள நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடைய சடலங்களை தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்பது தொடர்பில் இம்மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.