(UTV | கொழும்பு) – பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 5 சிறைக் கைதிகள் இன்று காலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த கைதிகள் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் 22, 23, 26, 32 மற்றும் 52 வயதுடைவர்கள் எனவும் குறித்த அனைத்து கைதிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தப்பிச் சென்ற கைதிகளை கைது செய்வதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில தகவல் தெரிந்தால் 0718 591 233 அல்லது 119 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.