பாராளுமன்ற கொத்தணி : மேலும் ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள், பணியாளர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினற்கள் 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற அதிகாரிகளில் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றும்(15) 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்தனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேர் நேற்றைய தினம் பரிசோதனைகளில் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பணியாளர்களுடன் பாராளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *