(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளை முன்னிட்டு, அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த பதவியேற்பு நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதுடன், ஏனைய அரசாங்க பிரதிநிதிகளும் பதவியேற்கவுளளனர்.
அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பின் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை மாற்றுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.