(UTV | சீனா) – சீன அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அலிபாபா குழுமம் உட்படுத்தப்பட்ட பின் முதல் முறையாக பொதுவெளியில் அதன் நிறுவனர் ஜாக் மா நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மாவின் நிறுவனங்கள் மீது சீன கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிடி இறுகிவரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்துக்கு பிறகு முதன் முறையாக, இன்று(20) காணொளி வாயிலாக சீனாவின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 100 ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜாக் மா பேசியதாக உள்ளூர் அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாங்காங் பங்குச்சந்தையில் தொடர் சரிவை கண்டு வந்த அலிபாபா நிறுவனத்தின் பங்குகளின் விலை இந்த தகவல் வெளிவந்தவுடன் சுமார் ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.