(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி, காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட 10 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.