(UTV | கொழும்பு) – புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும், வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;
“.. நாட்டில் பலருக்கு செவி புலன் பிரச்சினை காணப்படுகின்றது. காதுகளில் படியும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக காது துடைப்பான், வாகன திறப்பான், சட்டை பின், போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக செவியினுள் காயங்கள் ஏற்படுவதுடன் நாளடைவில் செவிப்புலன் பிரச்சினை ஏற்படுகிறது..” என சந்ரா ஜயசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.