ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அரசினால் வழங்கப்படும் ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“தற்போது, ​​இலங்கையில் 1,073 சமூர்த்தி வங்கிகளில் ரூ.5000 என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம்.

இதற்கு தேவையான நிதியை சமூர்த்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *