மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து

(UTV |  இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவாகியுள்ளது.

கொவிட் -19 தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

மே 8 ம் திகதி நடைபெறவிருந்த 16 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி போர்ச்சுகலுக்கு செல்லவிருந்தார், அதைத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் நாட்டிற்கும் செல்லவிருந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இப்போது வீடியோ கான்பரெஸிங் வாயிலாக நடக்கும் என கூறப்படுகிறது

சென்ற வருடமும், மோடி தனது பிரஸ்ஸல்ஸ் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியிருந்ததால், ஜூலை 2020இல் நடைபெறவிருந்த, 15 வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வீடியோ கான்பரெஸிங் வாயிலாக நடைபெற்றது

திங்களன்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்திருந்தார்.

ஏப்ரல் 25 ஆம் திகதி ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தருவதாக இருந்தார். முன்னதாக அவர் ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *